நல் மேய்ப்பன் இவரே – NAL MEIPPAN IVARE Song lyrics
நல் மேய்ப்பன் இவரே
இயேசு நல் மேய்ப்பன் இவரே
சொல்லொண்ணா அன்பினால்
தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே
ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்
அழியாமை ஜீவன் அளித்திட வந்தார்
ஆடுகள் முன்னே செல்லுகின்றார்
அவரின் பின்னே சென்றிடுவோம்
…நல் மேய்ப்பன்
கள்வர் மந்தையை சாடிடும் போதும்
கயவரின் வஞ்சக வலை வீசும் போதும்
பிள்ளையைப் போல தோள்களிலே
கள்ளமில்லா துயில் கொண்டிடுமே
…நல் மேய்ப்பன்
மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தை
மேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள்
குரலொலி கேட்டு தேடிடுமே
குயவனின் கையில் அடங்கிடுமே
…நல் மேய்ப்பன்