Muthalagi Mudivagi Moontril Ontragi song lyrics – முதலாகி முடிவாகி மூன்றில் ஒன்றாகி
Muthalagi Mudivagi Moontril Ontragi song lyrics – முதலாகி முடிவாகி மூன்றில் ஒன்றாகி
முதலாகி முடிவாகி மூன்றில் ஒன்றாகி
உயிரினுக்கு ஒளியாகி உறவின் ஊற்றாகி
என்னை ஆட்கொண்ட காவியமே
நீ வாழியவே
போற்றி போற்றி இறையே போற்றி
போற்றி போற்றி இன்பமே போற்றி
அகஇருள் அகற்றி உலகமெல்லாம்
அருள்தனை சுரந்திடும் பகலவா போற்றி
உள்ளத்தில் உள்ள தீமைகள் நீக்கி
உண்மையை உணர்த்திடும் தூயவா போற்றி
இதயத்தில் அமர்ந்து என் வாழ்வில்
வாசம் செய்யும் மன்னவா போற்றி
அன்பினால் ஆட்கொண்டு இவ்வுலகை
அமைதியாய் மாற்றிடும் அன்பனே போற்றி
Muthalagi Mudivagi Christian Bhajan lyrics