Mazhalai idhayam naadivaruvom song lyrics – மழலை இதயம் நாடி வருவோம்
Deal Score0
Shop Now: Bible, songs & etc
Mazhalai idhayam naadivaruvom song lyrics – மழலை இதயம் நாடி வருவோம்
மழலை இதயம் நாடி வருவோம் என விழைவீரோ
இசைக் குழலின் ஒலியில் மயங்குவோரே பேச வருவீரோ
மானைப்போல் தவித்து நிற்கும் இதயம் பாரீரோ
தேனைப் போல அருள் சுரந்து தேற்ற வாரீரோ
- குழந்தை போல பேச எனக்கு இதயமில்லையே
மழலைச் சொல்லும் நாட்களாக மறந்து போனதே (2)
இளமைப் பொலிவில் இதயம் தானும் இறுகிப் போனதோ
வளமை சேர்க்கும் உனை மறந்து மயங்கிப் போனேனே - பாவி என்னைப் பார்த்துப் பார்த்து பரிதவிக்கின்றீர்
மேவி மேவி அழைத்து அழைத்து அன்பு செய்கின்றீர் (2)
தவழ்ந்து தவழ்ந்து தேடி தேவா உன்னை அடைந்துள்ளேன்
மகிழ்ந்து என்னை ஏற்றுப் பாவ பொறுத்தலளிப்பீரோ