மனுகுல பாவம் போக்க – Manukula Paavam pokka
மனுகுல பாவம் போக்க – Manukula Paavam pokka Tamil christmas song lyrics, Written tune ,sung & Composed by Bro. Stephen Prakash
மனுகுல பாவம் போக்க
மனு அவதாரம் எடுத்த மனுஷகுமாரனே
எங்கள் தேவகுமாரனே -2
நமக்கொரு பாலகன் நமக்கொரு குமாரன்
நமக்கொரு ரட்சகர் பிறந்தார்
பெத்லகேமிலே மாட்டு தொழுவிலே
யூத ராஜசிங்கம் பிறந்தார்
அவர் அதிசய, ஆலோசனை, நித்திய,
சமாதான, வல்லமை
மனதுருக்கமும், இரக்கமும், சாந்தமும்,
தயவும் உள்ளவர்
- தூதர்கள் பாடிட , நட்சத்திரம் தாளமிட
விண்ணுலகின் மகிழ்ச்சியானீர்
எங்கள் பூவுலகின் மகிழ்ச்சியானீர்-2
ஏழை கோலமாய் இடமில்லை அவதரிக்க-2
மாட்டு தொழுவம் தெரிந்தெடுத்தாரே. -மனுகுல பாவம் போக்க
பிறந்தார், பிறந்தார்,பிறந்தார்,பிறந்தார்
பாலனாக இயேசு பிறந்தார்
கன்னிமரியின் மைந்தனாக கர்த்தர்
இயேசு பிறந்தார்
அவரே வழியும், சத்தியமும்,
ஜீவனுமானவர்
தன்னுயிர் ஈந்து மனு உயிர் காத்திடபிறந்தவர்.
- மேய்ப்பர்கள் இராவிலே மந்தையை காத்திருக்க
நட்சத்திரம் வழி சொன்னதே
நம் ரட்சகர் பிறந்தாரென்று-2
பிதாவின் மடியில் செல்ல பிள்ளையே-2
யாவையும் துறந்து பாலனாய் பிறந்தார் – மனுகுல பாவம் போக்க
நமக்கொரு பாலகன் நமக்கொரு குமாரன்
நமக்கொரு ரட்சகர் பிறந்தார்
பெத்லகேமிலே மாட்டு தொழுவிலே
யூத ராஜசிங்கம் பிறந்தார்
அவர் அதிசய, ஆலோசனை, நித்திய,
சமாதான, வல்லமை
மனதுருக்கமும், இரக்கமும், சாந்தமும்,
தயவும் உள்ளவர்
- உலகத்தின் பாவத்தை சுமந்து
தீர்த்திடும் தேவ ஆட்டுக்குட்டி
எங்கள் ஜீவ ( பஸ்கா) ஆட்டுக்குட்டி-2
பாவத்தின் சம்பளம் மரணம்என்றதாலே-2
தன்னையே பலியாக்க மன்னுலகில் பிறந்தார்.
மனுகுல பாவம் போக்க
மனு அவதாரம் எடுத்த மனுஷகுமாரனே
எங்கள் தேவகுமாரனே -2
எங்கள் தேவகுமாரனே.
மனுகுல பாவம் போக்க song lyrics, Manukula Paavam pokka song lyrics, tamil christmas songs
Manukula Paavam pokka song lyrics in English
Key Takeaways
- The article discusses the Tamil Christmas song ‘மனுகுல பாவம் போக்க – Manukula Paavam pokka’.
- It features lyrics that celebrate the birth of Jesus Christ as a savior.
- The song expresses joy and divine qualities associated with Jesus and his birth in Bethlehem.
- Various themes include redemption, peace, and compassion amidst the Christmas celebration.
- The lyrics highlight the significance of Jesus’s birth in the context of human sinfulness.
Estimated reading time: 2 minutes

