Mannil Vilukintra Malaithuli Naanae song lyrics – மண்ணில் விழுகின்ற மழைத்துளி
Mannil Vilukintra Malaithuli Naanae song lyrics – மண்ணில் விழுகின்ற மழைத்துளி
மண்ணில் விழுகின்ற மழைத்துளி நானே.
உம் பாதை நதியாகிறேன்
ஆழ்கடல் போன்ற அழிவில்லா அன்பே
உயிரோடு உயிராகுவேன் -உம்மாலே
நிலையாக நிழல் காணுவேன்.
உம் வார்த்தையில் உம் பாதையில்
தினம்தோறும் நடமாட வேண்டும்.
விழிமூடியே புகழ்பாடுவேன்
கனிவான கரம்தாங்க வேண்டும்.
உலகெல்லாம் எடுத்துரைப்பேன் உம் மாண்பினை.
உமக்காக அர்ப்பணிப்பேன் என் வாழ்வினை
கனவாக நினைத்ததையே நிஜமாக கண்டேன்.
உமதாற்றலை மனம் தேடுதே
புது வாழ்வின் வழிகாட்டியே
உறவாடவே உமதாகவே
மகிழ்கின்றேன் இசைமீட்டியே.
பேதங்கள் தங்காத உலகாகவே
வேதங்கள் வளர்ந்திடுமே நிலையாகவே
என் அன்பே எம் இறையே வாழ்விற்கு ஒளி நீரே
மண்ணில் விழுகின்ற மழைத்துளி தியானப்பாடல்