Mannavaru porantharu Christmas song lyrics – மன்னவரு பொறந்தாரு
Mannavaru porantharu Christmas song lyrics – மன்னவரு பொறந்தாரு
மன்னவரு பொறந்தாரு
மகிழ்விக்க வந்தாரு
மனசெல்லாம் நிறைஞ்சிருச்சு
பூமிக்கு ஒரு புதல்வராய்
பூவுலகே வாழ்த்தும் சொல்லும்
புனிதராய் பிறந்தாரு இயேசு _2
தந்தனத்தோம் தந்தனத்தோம்
தாளம் போடு நீ
ஒரு மெட்டு கட்டி மெட்டு கட்டி
ராகம் போடு நீ
சொந்தம் பந்தம் யாவும்
உன்னை விட்டு தள்ளலாம்
நீ நம்பினவர் எவரும்
உன்னை ஒதுக்கி வைக்கலாம்
உனக்காக பிறந்தாரே
ஒரே ஒரு தெய்வம்
ஒரு போதும் உன்னை என்றும்
கைவிடாத தெய்வம் _ இயேசு
பாவி என்று உன் மேல்
வீண் பழி சொல்லலாம்
வீணாய் போனவென் என்று
பட்டம் கட்டலாம்
உருவாக்கப் பிறந்தாரே
ஒரே ஒரு தெய்வம்
பாவியென்று தள்ளாத
பாசமுள்ள தெய்வம்_ இயேசு