Saint Aloysius’s Tamil Song – புனித ஞானப்பிரகாசியார் பாடல்
Saint Aloysius’s Tamil Song – புனித ஞானப்பிரகாசியார் பாடல்
காரங்காட்டில் வீற்றிருக்கும் புனிதரே எங்கள் புனிதரே
இதய நிழலில் வாழ வந்தோம் என்றுமே எம்மிடை தங்குமே
- கரத்தில் தவழும் லீலி மலரின் தூய்மை உள்ளத்தில்
இல்லத்தில் தங்கிட அருள் தருவீரே
தோளில் தாங்கும் சிலுவை காட்டும் தியாக நெறியினில்
எம் வாழ்க்கை தொடர்ந்திட வரம் அருள்வீரே
உம்மைப் போல மரியின் அன்பை நானும் சுவைத்திட
உறவின் துணிவில் அவரைப் போல நாளும் வளர்ந்திட
எந்நாளும் நும் காவல் யாமும் வேண்டினோம்
உண்மை தேடும் சமூகமாக உம்மைத் தேடினோம்
என்றும் தீரா நீதித் தாகம் நெஞ்சில் வேண்டினோம்
அருள் தாருமே தூய அலோசியசே - கூடும் பொழுதில் கோடி நன்மை கூடி வருகுதே
கவலையும் கண்ணீரும் ஓடி மறையுதே
தன்னை மறந்து பிறரை நாடும் பண்பு மலருதே
சோதரரே எல்லோரின் நெஞ்சம் சொல்லுதே
உம் வழியே எம் வழியாய் மாற்றம் கண்டிட
ஏழையரின் வாழ்வு மண்ணில் ஏற்றம் கண்டிட
எந்நாளும் நும் காவல் யாமும் வேண்டினோம்
உழைப்பைத் தேடும் சமூகமாக உம்மை தேடினோம்
வளமை எளிமை வாழ்வில் காண உம்மை நாடினோம்
அருள் தாருமே தூய அலோசியசே
Saint Aloysius’s Song புனித ஞானப்பிரகாசியார் பாடல் sung by Fr. VICTOR காரங்காட்டில் வீற்றிருக்கும் புனிதரே karankattil veetrirukum punithare