Kankalai Yeareduthu Kartha Ummai song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை

Deal Score0
Deal Score0

Kankalai Yeareduthu Kartha Ummai Paarkkaiyilae song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை

கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை பார்க்கையிலே
கண்ணீரை துடைத்திடும் உங்க கரங்கள் கண்டேனே
உம் சமூகம் வந்து நின்று உம்மோடு பேசுகையில்
என் பெயரை அழைக்கும் உந்தன் குரலை கேட்டேனே
மன்னிப்பு தந்தவரே மகனாய் ஏற்றவரே
மனிதர்கள் மத்தியிலே உயர்த்தி வைத்தவரே
ஆகாய விரிவிலும் கடற்கரை மணலிலும்
அளவிட முடியாத அன்பு கூர்ந்தீரே

அன்பே அழகே அடைக்கலமான என் அரணே
உயிரே உறவே உயிரோடு உயிரான உணர்வே
என் உறைவிடமானவரே

  1. பாழான என் வாழ்வில் பழுதுகள் சீரமைத்து
    பட்டணமாக என்னை நிறுத்தி வைத்தீரே
    கோணலான என் வாழ்வில் கரடுகள் மாற்றியே
    கன்மலைமீது என்னை உயர்த்தி வைத்தீரே
    நிகரே இல்லாத தகப்பனானவரே
    நித்தமும் கிருபையினால் அலங்கரிப்பவரே
    நெகிழவிடாதவரே
  2. வறண்ட நிலத்திற்கு மழைதரும் மேகங்கள் போல் என்
    வாழ்வின் வறட்சியெல்லாம் செழிக்க செய்தவரே
    இருள் என்னை மூடிக்கொள்ளும் வேளைகள் வந்தாலும்
    பிரகாச வெளிச்சமாக மீட்டுக்கொள்பவரே
    கடலில் மூழ்கும்போது கரத்தை பிடித்தீரே
    கடல்மேல் நடக்க என்னை தூக்கி எடுத்தீரே
    கலங்கரை விளக்கமானீரே
  3. துணிக்கைகள் போதுமென்று தேடிவந்த என்னையுமே
    பந்தியில் உம்மோடு அமர வைத்தவரே
    எதிரிகள் முன்னிலையில் என் தலையை எண்ணெயினால்
    அபிஷேகம் செய்து என்றும் அழகு பார்ப்பவரே
    அதிசயமாக என்னை நடத்தி வந்தீரே
    அதிபதியோடு என்னை அமர செய்தீரே
    அனுகூலமாகிவிட்டீரே

Uraividamanavare song lyrics by Karun Kingston Joy – உறைவிடமானவரே

Jeba
      Tamil Christians songs book
      Logo