Iyarkkaiyil Inainthava song lyrics – இயற்கையில் இணைந்தவா
Iyarkkaiyil Inainthava song lyrics – இயற்கையில் இணைந்தவா
இயற்கையில் இணைந்தவா
சரணம் சரணம் இறைவா சரணம்
இதயத்தில் நிறைந்தவா
சரணம் சரணம் இறைவா சரணம்
இரக்கத்தின் தெய்வமே தலைவா
சரணம் சரணம் இறைவா சரணம்
இன்பம் மயமாய் இருக்கும் இறைவா
சரணம் சரணம் இறைவா சரணம்
அமைதியின் அன்பனே
அகிலத்தின் ஆதாரமே
அருளின் வடிவே ஆயனே தலைவா
அன்பின் அமுதாய் இருக்கும் இறைவா
ஏழையின் துணைவனே
எளிமையின் சிகரமே
என்தன் மீட்பின் ஒளியே தலைவா
என்னை இயக்கும் அன்பின் இறைவா
Sacred Heart Sisters