Immattum Katha En nesar Iniyum Kakka Vallavar song lyrics – இம்மட்டும் காத்த என் நேசர்

Deal Score0
Deal Score0

Immattum Katha En nesar Iniyum Kakka Vallavar song lyrics – இம்மட்டும் காத்த என் நேசர்

இம்மட்டும் காத்த என் நேசர்
இனியும் காக்க வல்லவரே -2

துன்பத்தின் நேரத்திலும் வேதனை காலத்திலும்
கலக்கத்தின் பயத்திலும் போராட்ட சூழலிலும்
கரம் பிடித்து நடந்தீரே என்னை தூக்கி சுமந்தீரே
என் கரம் பிடித்து நடந்தீரே என்னை தூக்கி சுமந்தீரே – இம்மட்டும் காத்த

வியாதி படுக்கையிலும் சோர்வின் நேரத்திலும்
துக்கத்தின் காலத்திலும் தனிமையின் கண்ணீரிலும்
பெலனாக இருந்தீரே எனக்கு ஆலோசனை தந்தீரே
என் பெலனாக இருந்தீரே எனக்கு ஆலோசனை தந்தீரே – இம்மட்டும் காத்த

வன் கண் பொறாமையிலும் எதிரியின் சூழ்ச்சியிலும்
தோல்வியின் பாதையிலும் நிந்தையின் நேரத்திலும்
கண்மணி போல் காத்தீரே உம் கண்களின் இமைக்குள்ளே
என்னை கண்மணி போல் காத்தீரே உம் கண்களின் இமைக்குள்ளே – இம்மட்டும் காத்த

Jeba
      Tamil Christians songs book
      Logo