என்னை படைத்தவரே – Ennai Padaithavarea Tamil christian song lyrics

என்னை படைத்தவரே – Ennai Padaithavarea Tamil christian song lyrics

என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே
முன் குறித்தவரே வனைந்தவரே
உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே (2)

யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)

1.நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்
பாசம் காட்டி மாறாத அன்பை எனக்கு தந்தவரே (2)

யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)

2.படைகள் எல்லாம் எனை சூழ நின்று பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் போது
பலத்த அரணாய் எனக்காக நின்று பாதுகாத்தவரே (2)

யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)

3.முள்ளுள்ள பாதையில் நான் நடந்த போது
கழுகைப் போல எனை தூக்கி சுமந்தீர்
வறுமை மாற்றி வளமான வாழ்வை எனக்கு தந்தவரே (2)

யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)

என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே
முன் குறித்தவரே வனைந்தவரே
உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே (2)

யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)

We will be happy to hear your thoughts

      Leave a reply