Enna Tharuvom Engal Iraiva christmas offertory song lyrics – என்ன தருவோம் எங்கள் இறைவா

Deal Score0
Deal Score0

Enna Tharuvom Engal Iraiva christmas offertory song lyrics – என்ன தருவோம் எங்கள் இறைவா

காணிக்கைப் பாடல்

பல்லவி:
என்ன தருவோம், எங்கள் இறைவா?
என்ன தந்தால் ஏற்று மகிழ்வாய்?

சரணம் 1:

சல்லிக் காசைப் போட்ட விதவை
எல்லாம் தந்தார் என்று சொன்னீர்
தியாகம் செய்து கொடுப்பவர்க்கே
தேவன் வழங்கிடும் ஆசி என்றீர்

சரணம் 2:

உள்ளங்கையில் உள்ளதைப் பார்த்து
உவகை நீயும் கொள்வதில்லை
உன்னத இறைவா, உமது பார்வை
உள்ளத்தில் உள்ள உணர்வின் மேல் தான்

சரணம் 3:

வறுமை சூழ வையம் வந்த
வல்ல இறைவா, என்ன வேண்டும்?
கள்ளம், கபடம், கயமை இல்லா
உள்ளம் தன்னை உனக்குத் தருவோம்.

    Jeba
        Tamil Christians songs book
        Logo