Engirunthu Enakkuthavai Varum Entru song lyrics – எங்கிருந்து எனக்குதவி வரும்

Deal Score0
Deal Score0

Engirunthu Enakkuthavai Varum Entru song lyrics – எங்கிருந்து எனக்குதவி வரும்

எங்கிருந்து எனக்குதவி வரும் என்று
ஏங்குகின்றேன் நான் ஏங்குகின்றேன்

விண்ணையும் மண்ணையும் படைத்தவரே
உம்மிடமிருந்தே எனக்கு உதவி வரும்
செங்கடலை வழியாக்கிக் கொடுத்தவரே
உம்மிடமிருந்தே எனக்கு உதவி வரும்

எரிக்கோவின் தடைகளை உடைத்தவரே
உம்மிடமிருந்தே எனக்கு உதவி வரும்
பாலையில் மன்னாவைப் பொழிந்தவரே
உம்மிடமிருந்தே எனக்கு உதவி வரும்

தண்ணீரை இரசமாக்கித் தந்தவரே
உம்மிடமிருந்தே எனக்கு உதவி வரும்
அப்பங்களை பலுகச் செய்து கொடுத்தவரே
உம்மிடமிருந்தே எனக்கு உதவி வரும்

காற்றலையும் கடலையும் கடிந்தவரே
உம்மிடமிருந்தே எனக்கு உதவி வரும்
முடவரை நடமாட வைத்தவரே
உம்மிடமிருந்தே எனக்கு உதவி வரும்
பாவியைப் பரிவோடு அணைத்தவரே
உம்மிடமிருந்தே எனக்கு உதவி வரும்
இலாசருக்கு உயிர்க்கொடுத்து மகிழ்ந்தவரே
உம்மிடமிருந்தே எனக்கு உதவி வரும்

வாழ்வு தரும் வார்த்தைகளைக் கொடுப்பவரே
உம்மிடமிருந்தே எனக்கு உதவி வரும்
மூன்றாம் நாள் உயிர்பெற்று எழுந்தவரே
உம்மிடமிருந்தே எனக்கு உதவி வரும்

    Jeba
        Tamil Christians songs book
        Logo