En Uyirukku Uyiragi song lyrics – என் உயிருக்கு உயிராகி

Deal Score0
Deal Score0

En Uyirukku Uyiragi song lyrics – என் உயிருக்கு உயிராகி

காணிக்கை பாடல்:

என் உயிருக்கு உயிராகி வாழ்விற்கு பொருளான இயேசுவே
என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் நான் தருகின்றேன் -2
என் எண்ணங்கள் ஏக்கங்கள் தருகின்றேன்
உம் மீட்பின் திட்டத்தில் என்னையும் பயன்படுத்துமே
உம் அன்பின் நல் கருவியாய் என்னையும் உருவாக்குமே -2

என் உழைப்பையும் களைப்பையும் உணர்வோடு
நான் தருகின்றேன்
என் இதய அன்பை நாளும் இனிதாக நான் தருகின்றேன் – 2
மகிழ்வையும் இகழ்வையும் மாண்புடன் தருகின்றேன்
கருணையின் வேந்தனே கனிவோடு ஏற்பாய் -2
உம் திருவுடலாய் திரு இரத்தமாய் என்னை பலிப்பொருள் ஆக்கிடும் தேவா
பலிப்பொருள் ஆக்கிடும் தேவா

என் உறவையும் பிரிவையும் உளமார
நான் தருகின்றேன்
உன் பணிக்காக என்னை முழுவதும்
நான் தருகின்றேன் -2
பழியையும் வலியையும் மாண்புடன் தருகின்றேன்
கருணையின் வேந்தனே கனிவோடு ஏற்பாய் -2
உம் திருவுடலாய் திரு இரத்தமாய் எனை பலிப்பொருள் ஆக்கிடும் தேவா
பலிப்பொருள் ஆக்கிடும் தேவா

    Jeba
        Tamil Christians songs book
        Logo