என் ஆயன் என் இறைவன் – En Aayan En Iraivan

Deal Score+1
Deal Score+1

என் ஆயன் என் இறைவன் – En Aayan En Iraivan

நன்றி பாடல் – Thanksgiving song
என் ஆயன் என் இறைவன்
என் ஆயன் என் இறைவன்எனைக்காக்கின்றர்
அவரன்பை நான் பாடுவேன்
பலகோடி நன்மைகள் நாளும் தந்தார்
நன்றிப் பண் நான் பாடுவேன்
அவர் செயல்கள் மேலானவை அவரன்பு மாறாதது -2

1.அமர்வதையும் எழுவதையும் அறிந்திருந்தவர்
நல்வாழ்வை பரிசாக எனக்களித்தவர்
இருள் சூழ்ந்த பள்ளத்தில் நான் விழுகையில்
அவர் கோலும் நெடுங்கழியும் எனைத் தேற்றினார்
குறை நீக்கி நிறை காணும் தெளிவு தந்தார்
பசும்புல்லில் என்னை நாளும் இளைப்பாற்றினார்
என் குற்றம் மன்னித்து நோய் நீக்கினார்
அருள்நலமும் பேரன்பும் என்னை சூழுமே
உயிருள்ள நாளெல்லாம் புகழ் பாடுவேன் -2

2.மகத்துவமும் மகிமையும் அணிந்திருந்தவர்
ரதங்களென மேகங்கள் கொண்டிருந்தவர்
என் எதிரி கண்முன்னே எனை உயர்த்தினார்
அவர் வாக்குப் பிறழாமல் எனைக்காத்திட்டார்
அஞ்சாமல் வழிநடக்கும் வலிமை தந்தார்
நீரோடை நடப்பட்ட மரமாக்கினார்
பிறர் குற்றம் மன்னிக்கும் மனதைத் தந்தார்
அதன் பலனால் இறை அமைதி எனைச் சூழுமே
உயிருள்ள நாளெல்லாம் புகழ் பாடுவேன் -2

    Jeba
        Tamil Christians songs book
        Logo