எல்லா கனத்திற்கும் பாத்திரரே – Ella kanathirkkum Paathirarae
எல்லா கனத்திற்கும் பாத்திரரே – Ella kanathirkkum Paathirarae Tamil Christian Worship song lyrics,Tune and sung by Anand.
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
உம்மை பணிந்து குனிந்து வணங்கிடுவோம் -2
நீரே எங்கள் ராஜா
நீரே எங்கள் தேவன்
நீரே எங்கள் கோட்டை
நீரே எங்கள் பெலன் – எல்லா கனத்திற்கும்
நொருங்குண்டு நருங்குண்டவர்
மேலே வாசம் செய்யும்
நித்திய பரிசுத்தரே -2
தளர்ந்த கைகளை திடப்படுத்திடும்
தள்ளாடும் முழங்கால்களை பலப்படுத்தும் -2 – எல்லா
பலவீனத்தில் பலன் விளங்குமென்றி
நீதியின் வலக்கரத்தால் தாங்குகின்றீர் -2
கோணலானவையை செவையாக்குவீர்
குயவன் கையில் என்னை தாங்குவீர் – எல்லா
நெறிந்த நாணல் முறியாமல்
எதிரி விளக்கு அணையாமல்
நியாயத்தை நியாயமாக பேசும் தெய்வமே -2
காயம் கொண்ட என்னை கண்ணோக்கி பார்த்தீர்
தாங்கி நடத்திடும் பரிசுத்த கர்த்தரே – எல்லா
தாகம் கொண்ட நேரத்தில்
கண்மலையாய் வந்தவரே
தாகத்தை தீர்த்திடும் பரிசுத்தரே-2
பகலில் மேக ஸ்தம்பமாய்
இரவில் அக்கினி ஸ்தம்பமாய்
நமக்கு துணையாக இருப்பவரே – எல்லா
Ella kanathirkkum Pathirarae song lyrics in English
Ella kanathirkkum Paathirarae song lyrics, எல்லா கனத்திற்கும் பாத்திரரே song lyrics.