christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
கலகலக்கும் காலம் வந்தாச்சு
தன்னன்னா பாட்டுப் பாடு
தாளம் தட்டி ஆட்டம் ஆடு
ஒன்னா கூடி கொண்டாடு – நம்ம
ஏசு சாமி பிறந்து விட்டார் கொண்டாடு
வான தூதர் கீதம் பாட, வாங்க நீங்க கூட ஆட
விண்சாமி ஆளாய் இருந்தாரே
மண்சாமி முகமாய் மலர்ந்தாரே
இரவு விடியாத பகலே தெரியாத
இதயத்துல குடியேற வந்தாரே – ஆமா
நம்பிக்கையை அள்ளித்தர வந்தாரே
ஏங்க இனி ஏக்கம் நம்ம எண்ணத்துல
ஏசு சாமி வந்துள்ளாரு நம்ம மனசுல – இவர்
நம்ம கூட தான் இனி நம்ம கூட தான்
கொண்டாடு கொண்டாடு
கண்ணுக்கு கண்ணை எடுத்தோரில்
மண்ணிக்கும் மரத்தை நட்டாரே
போரால பகையால உறவே விரியாத
நெஞ்சங்கள குணமாக்க வந்தாரே – ஆமா
அன்புத்தீய ஏத்திவைக்க வந்தாரே
கிறிஸ்து பிறப்பு நடனப் பாடல் christmas dance song tamil