Appa Appa Ten Commandments song lyrics – அப்பா அப்பா பத்துக் கட்டளைகள்
Appa Appa Ten Commandments song lyrics – அப்பா அப்பா பத்துக் கட்டளைகள்
அப்பா அப்பா அப்பா அப்பா
வானுக்கெதிராகவும்
உமக்கு முன்பாகவும் குற்றம் செய்தேன்
உன் மகனெனும் தகுதியற்றேன்
உன் மகளெனும் தகுதியற்றேன் (2)
அப்பா அப்பா அப்பா அப்பா
- உன் ஆண்டவராகிய கடவுள் நாமே
நம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை
மாந்த்ரீகம் மூடநம்பிக்கை பில்லி சூனியம்
இவற்றை நம்பி வந்தேன்
ஜோதிடம் பார்த்தேன்
உம் அன்பை மறந்து விட்டேன்
நான் மாந்த்ரீகம் மூடநம்பிக்கை பில்லி சூனியம்
இவற்றை நம்பி வந்தேன்
ஜோதிடம் பார்த்தேன்
உம் அன்பை மறந்து விட்டேன்
திரும்பி வந்தேன் - கடவுளுடைய திருப்பெயரை வீணாக சொல்லாதே
இறைவன் பெயரை வீணாய்ச் சொல்லி
ஆணையிட்டு பாவம் பல செய்தேன்
புனிதம் இழந்து விட்டேன்
உன் அருளை இழந்து விட்டேன்
நான் இறைவன் பெயரை வீணாய்ச் சொல்லி
ஆணையிட்டு பாவம் பல செய்தேன்
புனிதம் இழந்து விட்டேன்
உன் அருளை இழந்து விட்டேன்
திரும்பி வந்தேன் - கடவுளின் திருநாட்களை புனிதமாக அனுசரி
ஞாயிற்றுக் கிழமைகள் கடன் திருநாட்களில்
திருவிருந்தில் பங்கு கொள்ளவில்லை
நேரம் வீண் செய்தேன்
தினம் ஜெபிக்க மறுத்துவிட்டேன்
நான் ஞாயிற்றுக் கிழமைகள் கடன் திருநாட்களில்
திருவிருந்தில் பங்கு கொள்ளவில்லை
நேரம் வீண் செய்தேன்
தினம் ஜெபிக்க மறுத்துவிட்டேன்
திரும்பி வந்தேன் - தாய் தந்தையை மதித்து நட
பெற்றோரை எதிர்த்தும் பிள்ளைகளை அடித்தும்
பாசமின்றி பாவி நான் நடந்தேன்
மதிக்கத் தவறிவிட்டேன்
என் பொறுப்பை இழந்து விட்டேன்
நான் பெற்றோரை எதிர்த்தும் பிள்ளைகளை அடித்தும்
பாசமின்றி பாவி நான் நடந்தேன்
மதிக்கத் தவறிவிட்டேன்
என் பொறுப்பை இழந்து விட்டேன்
திரும்பி வந்தேன் - கொலை செய்யாதே
பிறருக்குத் தீங்கு நற்பெயருக்குக் களங்கம்
வஞ்சகம் செய்து தீயவை நினைத்தேன்
கருக்கலைப்பு செய்தேன்
உன் மன்னிப்பை இழந்துவிட்டேன்
நான் பிறருக்குத் தீங்கு நற்பெயருக்குக் களங்கம்
வஞ்சகம் செய்து தீயவை நினைத்தேன்
கருக்கலைப்பு செய்தேன்
உன் மன்னிப்பை இழந்துவிட்டேன்
திரும்பி வந்தேன் - மோகப் பாவம் செய்யாதே
நடையுடையிலும் பாவனையில்
வீண் கவர்ச்சி செய்தேன்
தீயவை கண்டேன்
இன்பம் அடைந்து வந்தேன்
என் தூய்மை இழந்து விட்டேன்
நான் நடையுடையிலும் பாவனையில்
வீண் கவர்ச்சி செய்தேன்
தீயவை கண்டேன்
இன்பம் அடைந்து வந்தேன்
என் தூய்மை இழந்து விட்டேன்
திரும்பி வந்தேன் - களவு செய்யாதே
பிறரின் உடமையை பிறரின் சொத்துக்களை
ஆசை மிகக் கொண்டு சேதப்படுத்தியுள்ளேன்
குடித்து சூது செய்தேன்
என் கண்ணியம் இழந்துவிட்டேன்
நான் பிறரின் உடமையை பிறரின் சொத்துக்களை
ஆசை மிகக் கொண்டு சேதப்படுத்தியுள்ளேன்
குடித்து சூது செய்தேன்
என் கண்ணியம் இழந்துவிட்டேன்
திரும்பி வந்தேன் - பொய் சாட்சி சொல்லாதே
பொய்யென்று தெரிந்தும்
என் சுயநலத்தால் உண்மையை மறைத்து
புரணி பேசி வந்தேன்
தீர்ப்பிட்டு கெடுத்தேன்
பல தீமைகள் செய்தேன்
நான் பொய்யென்று தெரிந்தும்
என் சுயநலத்தால் உண்மையை மறைத்து
புரணி பேசி வந்தேன்
தீர்ப்பிட்டு கெடுத்தேன்
பல தீமைகள் செய்தேன்
திரும்பி வந்தேன் - பிறர் தாரத்தை விரும்பாதே
பிறரின் தாரத்தை போதைப் பொருளென
நினைத்து வாழ்ந்து
அன்பை நான் இழந்தேன்
உறவை முறித்துக்கொண்டேன்
உன் கட்டளை மறந்துவிட்டேன்
நான் பிறரின் தாரத்தை போதைப் பொருளென
நினைத்து வாழ்ந்து
அன்பை நான் இழந்தேன்
உறவை முறித்துக்கொண்டேன்
உன் கட்டளை மறந்துவிட்டேன்
திரும்பி வந்தேன் - பிறர் உடமையை விரும்பாதே
பிறரின் திறமையில் நல்ல குணங்களில்
பொறாமை நான் கொண்டேன்
பிறரை ஏமாற்றினேன்
தவறாய் அபகரித்தேன்
என் தந்தை உனை இழந்தேன்
நான் பிறரின் திறமையில் நல்ல குணங்களில்
பொறாமை நான் கொண்டேன்
பிறரை ஏமாற்றினேன்
தவறாய் அபகரித்தேன்
என் தந்தை உனை இழந்தேன்
திரும்பி வந்தேன்