Amaithi Amaithi Amaithi Vendum Avaniyilae song lyrics – அமைதி அமைதி அமைதி வேண்டும்

Deal Score0
Deal Score0

Amaithi Amaithi Amaithi Vendum Avaniyilae song lyrics – அமைதி அமைதி அமைதி வேண்டும்

அமைதி அமைதி அமைதி வேண்டும் அவனியிலே
ஆண்டவன் நீ வரவேண்டும் தரணியிலே

காசு பணம் இல்லையென்றால் வாழ்க்கையில்லையே
கையில் காசு வந்துவி;ட்டால் அமைதியில்லையே
வளமையிலே வாழும்போது தேடும் உறவுகள்
வறுமைவந்து வாட்டும்போது அருகில் இல்லையே
காலக்கோலங்கள் என்று மாறுமோ
என ஏங்கிஏங்கி வாழும் வாழ்வில் அமைதியில்லையே
அமைதியில்லையே

வீதி எங்கும் பெருகி வரும் சாதி முழக்கங்கள்
வேதனையில் கலங்கி நிற்கும் எமது நெஞ்சங்கள்
பாதைதோறும் மேடைபோட்டு பேசும் மனிதர்கள்
வாழ்ந்து காட்ட யாருமில்லை என்ன நியாயங்கள்
இதுதான் வேட்கையோ மனிதன் வாழ்க்கையோ
என அஞ்சிஅஞ்சி வாழும் வாழ்வில் அமைதியில்லையே
அமைதியில்லையே

பூமியெங்கும் சூழ்ந்து நிற்கும் போர் மேகங்கள்
போரில்லா உலகம் வேணடி எம் யாகங்கள்
ஆழ்மனத்தில் தேங்கி நிற்கும் ஏக்க மூச்சுகள்
ஆண்டவரின் பெயரைச் சொல்லி சமயச் சண்டைகள்
என்ன நேருமோ எது நடக்குமோ
என அஞ்சிஅஞ்சி வாழும் வாழ்வில் அமைதியில்லையே
அமைதியில்லையே

    Jeba
        Tamil Christians songs book
        Logo