Adhisayam Mannil vanthathu Christmas song lyrics – அதிசயம் மண்ணில் வந்தது
Adhisayam Mannil vanthathu Christmas song lyrics – அதிசயம் மண்ணில் வந்தது
அதிசயம் மண்ணில் வந்தது
மானிடர் பாவம் அகற்றிடவே…!
அன்பினால் ஆதிக்கம் செய்திட்ட உம் உறவு நித்தியமானது உறவு உருக்கொண்டது..! (2)
வாழ்த்தி பாடுவோம் ராஜனை
வாழ்த்தி பாடுவோம் 2
சத்யபரன் பிறந்திட்டார்
மரணத்தை ஜெயித்திட்டார்
வீராதி வீரனாம்
இயேசு மஹ ராஜனாம்…2
அவர் நாமம் பாரெங்கும் அதிசயம் செய்தது 2
அழகான தோற்றமாம்
அழகேசன் வந்துத்தார் 2
உன்னை காக்க வந்தவராம்
உன்னை மீட்க சிலுவையிலே
சோதனைகள் ஜெயிக்கவந்தார்
வெற்றிவேந்தன் வந்துத்தார்..! 2
சமாதானம் நித்தியமாய்
நமக்காக கொடுக்கவந்தார்.. 2
அன்பை அள்ளி தருவதற்காய்
அன்பரசன் வந்துத்தார் 2
இன்பம் தரும் நல்வழியாம்
இன்பமாய் நம் வாழ்வில்
இன்பத்தின்இருப்பிடமாய்
இன்பநாதன் வந்துத்தார்.. 2
சோர்ந்து போன நேரங்களில்
தளராமல் நாம் நிற்க 2
சிலுவையிலே மீட்டிடவே
சிலுவைநாதன் வந்துத்தார் 2