Aasi Idho Aasi Ido Aandavarkku song lyrics – ஆசி இதோ ஆசி இதோ ஆண்டவர்க்கு

Deal Score0
Deal Score0

Aasi Idho Aasi Ido Aandavarkku song lyrics – ஆசி இதோ ஆசி இதோ ஆண்டவர்க்கு

ஆசி இதோ ஆசி இதோ ஆண்டவர்க்கு அஞ்சி வாழ்வோர்க்கு
ஆண்டவர் வழங்கிடும் ஆசி இதோ

  1. ஆண்டவர்க்கு அஞ்சி அவர் வழியில் நடப்போர் பேறுபெற்றோர்
    உமது உழைப்பின் பலனை நீர் உண்பீர்
    நீர் நற்பேரும் நலமும் பெறுவீர் (2) நீர் சிறக்க நெல் செழிக்கும் இயல்பாகும்
    உன் உழைப்பிருக்க உயிர் சிறக்கும் உயர்வாகும்
    நீர் செல்லும் இடமெல்லாம் சிறப்பிருக்கும்
    நீர் செல்லும் உம் இடமெல்லாம் சிறப்பிருக்கும்
    எதையும் வெல்லும் இறையருள் உன் உடனிருக்கும்
  2. உம் இல்லத்தில் உம் துணைவியார்
    கனிதரும் திராட்சை கொடி போல் இருப்பார்
    உண்ணும் இடத்தில் உன் பிள்ளைகள்
    ஒலிவ கன்றுகளை போல் உன்னை சூழ்ந்திருப்பர்
    ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போர்
    இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பர்

வாழ்வுதரும் உறவுகளால் வளமை வரும்
பிள்ளை வளமென்னும் வளமையினால் வீடமையும்
உன் சுற்றமும் நட்பும் சூழ்ந்திருக்கும்
உம் சுற்றமும் நட்பும் உம்மை சூழ்ந்திருக்கும்
எந்த சூழ்நிலை அமைந்தாலும் உறவு வரும்

Aasi Idho Aasi Ido Aandavarkku தியானப்பாடல் song lyrics

    Jeba
        Tamil Christians songs book
        Logo