Aarathanikkuvanthavarae Ganam Magimai song lyrics – ஆராதனைக்குகந்தவரே கனம் மகிமை
Aarathanikkuvanthavarae Ganam Magimai song lyrics – ஆராதனைக்குகந்தவரே கனம் மகிமை
ஆராதனைக்குகந்தவரே கனம் மகிமைக்கெல்லாம் பாத்திரரே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை உயர்த்தி ஆராதிக்கின்றோம் உந்தன் அன்பினால் எங்கள் உள்ளம் நிறைந்து – நன்றி நிறைவால் பொங்கி வழிகின்றேதே -2
- நீதியறியாத எங்களை உந்தன் நீதியாக்கிட பாவமறியாத இயேசுவை நீர் பாவமாக்கினீரே நீதியின் உணர்வினால் உம்மிடம் நெருங்கிட நன்மைகள் அடைந்திட திராணியை தந்தீரே
- இயேசுவின் நாமம் எங்களுடைய அதிகார பத்திரம் உரிமையோடே உச்சரிப்போம் உபயோகப்படுத்துவோம் இயேசுவின் நாமத்தில் அனைத்தையும் தந்தீரே தந்தை உம் அன்பினை எண்ணியே தொழுகிறோம்.
- பிதாவே உந்தன் சுதந்தரராய் இயேசுவை வைத்தீரே எங்களை உடன் சுதந்தரராய் அவருடன் இணைத்தீரே எங்களின் சுதந்தரம் அனைத்தையும் அறிந்திட வார்த்தையை நோக்குவோம் வளமுடன் வாழ்வோம்
pas. ரவி ராபர்ட் (சென்னை)
R-Disco T-120 Cm 2/4