Aarathanai En Yesuvukke song lyrics – ஆராதனை என் இயேசுவுக்கே
Aarathanai En Yesuvukke song lyrics – ஆராதனை என் இயேசுவுக்கே
ஆராதனை என் இயேசுவுக்கே, ஆராதனை என் மீட்பருக்கே
ஆராதனை என் இயேசுவுக்கே,ஆராதனை என் நேசருக்கே
துதி கீதங்கள் எந்நாளும் பாடி துதிப்போம்
புது கானங்கள் எப்போதும் பாடி துதிப்போம்
அல்லேலூயா ஆராதனை, அல்லேலூயா துதி ஆராதனை – 2
நேற்று இன்று நாளை என்றும் இயேசு மாறாதவர்
நிகரே இல்லா தெய்வம் இயேசு வாக்கு மாறாதவர்
வழியும் வார்த்தையும் வாழ்வும் அவரே இயேசு மாறாதவர்
மரித்தார் உயிருடன் எழுந்தார் இயேசு வாக்கு மாறாதவர்
அந்த தூயாதி தூயவரை பாடி துதிப்போம்
நம் இராஜாதி இராஜாவை பாடி துதிப்போம்
புது பாடல் புது ராகம் இசையோடு வணங்கிடுவோம் – 2அல்லேலூயா..
வானம் பூமி சூரியன் சந்திரன் அவரை துதித்திடுதே
காற்றும் கடலும் மலையும் மடுவும் அவரை துதித்திடுவதே
நடக்கும் நீந்தும் பறக்கும் உயிரினம் அவரை துதித்திடுவதே
மலர்கள் மரங்கள் செடிகள் கொடிகள் அவரை துதித்திடுவதே
அந்த தேவாதி தேவனை பாடி துதிப்போம்
வல்ல கார்த்தி கர்த்தரை பாடி துதிப்போம்
பலி பீடம் ,முன் நின்று, தலை தாழ்த்தி கும்பிடுவோம்- 2 அல்லேலூயா