Aanandam Pongiduthu Un Namam song lyrics – ஆனந்தம் பொங்கிடுது உன் நாமம்
Aanandam Pongiduthu Un Namam song lyrics – ஆனந்தம் பொங்கிடுது உன் நாமம்
ஆனந்தம் பொங்கிடுது உன் நாமம் பாடும்போது
நிம்மதி தங்கிடுது உன்னோடு வாழும்போது
நம்பிக்கை பிறக்குது உன்வார்த்தை கேட்கும்போது
நல்லாசீர் கிடைக்குது உன் வேலை செய்யும்போது
ஆயிரம் மனிதர் வந்தாலும்
அனுதினம் துயரம் தந்தாலும்
எப்போதும் போதும் உன் அன்பு
உள்ளம் உடைந்து ஒதுங்கிய நேரம்
உடனே வந்தது நீ அல்லவா
மீண்டும் ஆழம் கூட்டிச் சென்று
நிறைவைக் கொடுப்பது நீ அல்லவோ
ஒன்றும் அறியா எளியவன் என்னை
விரும்பியே அழைத்தது நீ அல்லவோ
பலமுறை மறுத்தும் உமைவிட்டு பிரிந்தும்
உயர்வு தந்தது நீ அல்லவோ