Potri Pugazhndhu Paduvean ummai song lyrics – போற்றி புகழ்ந்து பாடுவேன்
Potri Pugazhndhu Paduvean ummai song lyrics – போற்றி புகழ்ந்து பாடுவேன்
போற்றி புகழ்ந்து பாடுவேன் – உம்மை
தாழ்ந்து பணிந்து வணங்குவேன்
உயிர்;த்தரும் உணவான இயேசுவே
வாழ்வுதரும் நீரான இயேசுவே
எனைத்தேடும் ஆயனாம் இயேசுவே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
நேசத்தால் தாங்கிடும் தாயுள்ளமே
பாவத்தை கழுவிடும் அருள்வெள்ளமே
திக்கற்ற எனக்கு அன்பில்லமே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
நிலையான நிறைவாழ்வின் பேரின்பமே
அலைமோதும் என்வாழ்வின் ஆறுதலே
சுகம்தந்து எனைக்காக்கும் மருத்துவரே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
தட்டினால் திறக்கும் பரிவுள்ளமே
நல்லதைக் கொடுக்கும் கொடைவள்ளலே
கண்ணீரைத் துடைக்கும் ஆனந்தமே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
உயிராக்கி உருவாக்கும் காருண்யமே
உறவாகி எனைத்தேற்றும் என்சொந்தமே
பணிவாழ்வு பயணத்து துணையும் நீயே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
Potri Pugazhndhu Christian Bhajan lyrics