Irai Vaarthaiyana kadavul song lyrics – இறை வார்த்தையான கடவுள்
Deal Score0
Shop Now: Bible, songs & etc
Irai Vaarthaiyana kadavul song lyrics – இறை வார்த்தையான கடவுள்
இறை வார்த்தையான கடவுள் இன்று
நம்மிடையே குடிகொண்டார்
நிறை வாழ்வு வழங்க இறை நிலை துறந்து
குழந்தையாய் பிறந்துள்ளார் (2)
- வாருங்கள் வாருங்கள் இறை மக்களே
மீட்பராம் யேசுவை பாடிடுவோம்
வாருங்கள் வாருங்கள் இறை மக்களே
மரியாளின் மைந்தனை பணிந்திடுவோம்
ஆ……ஆ….. - உலகில் உள்ள படைப்பு எல்லாம்
இறைவனால் உண்டானது
உயிர்கள் தழைக்க வாழ்வும் ஒளியும்
இயேசுவில் ஊற்றானது (2)
இயேசுவே உம்மீது நம்பிக்கை கொண்டு
உள்ளத்தில் ஏற்றுக் கொள்வேன்
கடவுளின் மகனாவேன் நான் கடவுளின் மகளாவேன் - மாட்சிமை நிறைந்த கடவுளின் பிரசன்னம்
யாருமே கண்டதில்லை
அப்பா தந்தை என உரிமையில் அழைக்கும்
இயேசுவிற்கு இணையில்லை (2)
இயேசுவின் வாழ்வில் உண்மையும் அருளும்
முழுமையாய் வெளிப்பட்டது
நிறை வாழ்வு மலர்ந்துள்ளது- இங்கு
குழந்தையாய் பிறந்துள்ளது