Uyarntha Adaikalathil Ennai song lyrics – உயர்ந்த அடைக்கலத்தில்
Uyarntha Adaikalathil Ennai song lyrics – உயர்ந்த அடைக்கலத்தில்
உயர்ந்த அடைக்கலத்தில் என்னை
உயர்த்தி வைத்தவரே
என் கால்கள் வழுவாமல் என்னை
பாதுகாப்பவரே
யெகோவா எங்கள் தேவனே
எல்ஷடாய் சர்வ வல்லவரே (2)
(1) நேசக்கரத்தால் என்னை அனைத்து
இரட்சிப்பை தந்தீரே
உம்மை மறுதலித்தாலும்
அன்பின் கயிற்றால் கட்டி அணைத்தீரே
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
என் நேசரே உம்மை உயர்த்திடுவேன் 2
உயர்ந்த அடைக்கலத்தில்.
(2) ஆபத்தில் நீரே என்னோடு இருந்து
தப்புவித்து உயர்த்தினிரே
உம் இரட்சிப்பினாலே திருப்தியாக்கி
மகிழச் செய்தீரே
[சர்வ] வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-
துதிக்கு பாத்திரரே உம்மை உயர்த்திடுவேன் 2
உயர்ந்த அடைக்கலத்தில்