Enthan Yesuvin Naamaththilae song lyrics – எந்தன் இயேசுவின் நாமத்திலே
Enthan Yesuvin Naamaththilae song lyrics – எந்தன் இயேசுவின் நாமத்திலே
எந்தன் இயேசுவின் நாமத்திலே
எண்ணில்லா நன்மைகள் செய்தவரே-2
இம்மானுவேலனாய் இருப்பவரே
நன்றியால் உள்ளம் நிறைந்திடுதே-2
கிருபை தாருமே வரங்கள் தாருமே-2
கனிகளால் நிறைத்திட கிருபை தாருமே-2
அல்லேலூயா ஆனந்தமே
அல்லேலூயா ஆராதனை-2
1.அறுவடையின் நேரம் வந்திடுதே
அற்புதங்கள் யாவும் நடந்திடுமே-2
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
சொன்னவை யாவும் நிறைவேறுமே-2-கிருபை
2.நினைப்பதற்கும் மேலாய் செய்பவரே
இழந்தவை யாவும் பெற்றிடவே-2
அனுதின ஜெபத்தில் தரித்திருப்போம்
தானாய் விளைந்ததை அறுத்திடுவோம்-2-கிருபை
3.உமக்காக என்றும் வாழந்திடவே
ஓட்டத்தை ஜெயமாய் முடித்திடவே
எக்காள சத்தம் தொனித்திடவே
மேகத்தில் ஒன்றாய் சேர்ந்திடவே-2-எந்தன்