Arul Tharum Aandu song lyrics – அருள் தரும் ஆண்டு
Arul Tharum Aandu lyrics – அருள் தரும் ஆண்டு
அருள் தரும் ஆண்டு இது அருள் தரும் ஆண்டு
ஆண்டவர் அருள் தரும் ஆண்டு ஆகட்டும் இந்த புத்தாண்டு
Happy Happy New Year … Have a Blessed New Year
Have a Peaceful New Year … Happy Happy New Year
(1 )வாரத்திற்குள் வரம் உண்டு வாங்கிக் கொள்ளுங்கள்
மாதத்திற்குள் மதம் உண்டு அதில் அருளை தேடுங்கள்
எல்லா தேதியிலும் நல்ல சேதியுண்டு தேடிப் பாருங்கள்
எல்லா தினங்களிலும் தனம் உண்டு தோண்டிப் பாருங்கள்
அறிவை தோண்டிப் பாருங்கள்
நம்புகின்றவர்க்கு எல்லாம் கைகூடும் – நாம்
ஒன்று விதைத்தால் பலனோ நூறாகும் – வீண்
வம்பு வளர்த்தால் ஆற்றல் வீணாகும் – எங்கும்
அன்பு விதைத்தால் அகிலம் நன்றாகும்
(2 )தேடல் வேண்டும் தெளிவும் வேண்டும் கனவும் காணுங்கள்
இது உங்கள் நேரம் உங்கள் காலம் உணர்ந்து வாழுங்கள்
தினம் விரும்பி உழைத்தால் வெற்றி உண்டு என வேதம் சொல்லுங்கள்
நம் கடவுள் என்றும் உடனிருக்கிறார் கலக்கம் வெல்லுங்கள்
வீண் கலக்கம் வெல்லுங்கள்
( நம்புகின்றவர்க்கு எல்லாம் கைகூடும் … )
New Year Song புத்தாண்டுப் பாடல்