Nalla Seithi Solla Porom christmas song lyrics – நல்ல சேதி சொல்லப்போறேன்

Deal Score0
Deal Score0

Nalla Seithi Solla Porom christmas song lyrics – நல்ல சேதி சொல்லப்போறேன்

எல்லா ஜனத்துக்கும் சமாதானம்
உண்டு பண்ணும் நற்செய்தி சொல்ல போறேன்(2)
நம் இயேசு பிறந்தாரே
நம்மை இரட்சிக்க பிறந்தாரே

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
உலகமே கொண்டாடும் சந்தோஷமே(2)

1.யூத ராஜ சிங்கம் அவரே
ஏழை கோலமதில் பிறந்தார்.
சமாதான பிரபு அவரே
தொழு முண்ணனையில் பிறந்தார்(2)
மனுக்குலம் மீட்பினை அடைந்திடவே
மாமன்னன் அவதரித்தார்
மனிதன் மனிதனாய் வாழ்ந்திடவே
அவர் மனிதனாக பிறந்தார்
மாட்டு தொழுவத்திலே ஜெனித்தார்..

  1. தேவ மைதனாய் இருந்தும்
    தேவ மகிமையை துறந்து வந்தார்
    நம்மை ஜீவ பாதையில் நடத்த
    தன் ஜீவனை கொடுக்க வந்தார்
    நாம் நித்திய ஜீவனை அடைந்திடவே
    நம் நித்திய பிதா பிறந்தார்
    நாம் சத்திய வார்த்தைகளை அறிந்திடவே
    நம் சத்திய சீலன் பிறந்தார்
    கன்னி மரியின் வயிற்றில் பிறந்தார்.

எல்லா ஜனத்துக்கும்

    Jeba
        Tamil Christians songs book
        Logo