ஆதியிலே பரத்திலிருந்த வார்த்தை – Aathiyilae Parathiliruntha Vaarthai

Deal Score0
Deal Score0

ஆதியிலே பரத்திலிருந்த வார்த்தை – Aathiyilae Parathiliruntha Vaarthai

ஆதியிலே பரத்திலிருந்த வார்த்தை
அன்பு காட்ட இறங்கி வந்த வார்த்தை -2
அந்த வார்த்தை, தேவ வார்த்தை
தேவனிலிருந்து வந்த வார்த்தை
இயேசுதானே அந்த வார்த்தை
ஜீவபலியாய் வந்த வார்த்தை – ஆதியிலே

1. முப்பத்தெட்டு வருடமாக முடங்கிக்கிடந்தான்
சுகமே இல்லாம சூம்பி கிடந்தான்
மதமோ, சடங்கோ காக்க முடியல
பெதஸ்தா பெயரிலும் பிரயோஜனமில்ல -2
வார்த்தை வந்தது எழும்ப சொன்னது- அவன்
படுக்கையை எடுத்துகிட்டு கெளம்ப சொன்னது -2 –ஆதியிலே

2. பண்ணிரெண்டு வருடமாக பெரும்பாடு பட்டாள்
உதிர ஊரல் நிக்காம வேதனை பட்டாள்
பணமோ, ஜனமோ காக்க முடியல
வைத்தியரால் கூட தீர்க்க முடியல
வார்த்தைய கேட்டாள் ஆடைய தொட்டாள்
விடுதலையடைந்து வாழ்த்துப்பெற்றாள் -2. -ஆதியிலே

3. ஆறுதலா கூட வாழ புருஷனுமில்ல
நம்பிக்கையே ஓரே ஒரு வாலிபப்புள்ள
சாதி சனம் சொந்த பந்தம் உதவி செய்யல
அற்ப ஆயுசில் போனானே அந்த பயபுள்ள -2
வார்த்தை வந்தது பாடைய தொட்டது
நாயினூர் விதவைக்கு வாழ்வு தந்தது -2 -ஆதியிலே

Aathiyilae Parathiliruntha Vaarthai song lyrics in english

Aathiyilae Parathiliruntha Vaarthai

Jeba
      Tamil Christians songs book
      Logo