என் இயேசுவே மா நேசரே – En Yesuvae Maa Neasarae

Deal Score0
Deal Score0

என் இயேசுவே மா நேசரே – En Yesuvae Maa Neasarae

என் இயேசுவே மா நேசரே
அதிசய நாமம் பெற்றவரே
ஆதியும் அந்தமும் இல்லாதோரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே
ஆதியும் அந்தமும் இல்லாதோரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே

என் இயேசுவே மா நேசரே
அதிசய நாமம் பெற்றவரே

உலகோரின் பாவம் உந்தன்மீது
உரிமையாய் ஏற்று சிலுவை சென்றீர்
கல்வாரி மலைதனில் நீர் சிந்தின
செந்நீர் என் பாவங்கள் நீக்கினதே
கல்வாரி மலைதனில் நீர் சிந்தின
செந்நீர் என் பாவங்கள் நீக்கினதே

என் இயேசுவே மா நேசரே
அதிசய நாமம் பெற்றவரே

கொடியோர் பரிசுத்தம் அடைந்திடவே
கொல்கதா மேட்டினில் குருசில் சென்றீர்
கசையால் உடலில் அடிக்கப்பட்டீர்
சிரசினில் முள்முடி ஏற்றுக்கொண்டீர்
கசையால் உடலில் அடிக்கப்பட்டீர்
சிரசினில் முள்முடி ஏற்றுக்கொண்டீர்

என் இயேசுவே மா நேசரே
அதிசய நாமம் பெற்றவரே

நான் சுக பெலனை அடைந்திடவே
நின் உடல் மீதில் தழும்புகளால்
நரர்ப்பிணி போக்கிடும் பரிகாரியாய்
நானிலம் தன்னில் நீர் விளங்குகின்றீர்
நரர்ப்பிணி போக்கிடும் பரிகாரியாய்
நானிலம் தன்னில் நீர் விளங்குகின்றீர்

என் இயேசுவே மா நேசரே
அதிசய நாமம் பெற்றவரே

பரலோக வாழ்வை எனக்களிக்க
பரமனே உந்தன் ஜீவன் தந்தீர்
பாதகன் எந்தன் நல் வாழ்வுக்காய்
நாதனே நீரே பலியாகினீர்
பாதகன் எந்தன் நல் வாழ்வுக்காய்
நாதனே நீரே பலியாகினீர்

என் இயேசுவே மா நேசரே
அதிசய நாமம் பெற்றவரே
ஆதியும் அந்தமும் இல்லாதோரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே
ஆதியும் அந்தமும் இல்லாதோரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே

என் இயேசுவே மா நேசரே
அதிசய நாமம் பெற்றவரே

Jeba
      Tamil Christians songs book
      Logo