பூவின் தளிரோ பன்னீரின் – Poovin Thaliro Panneerin
பூவின் தளிரோ பன்னீரின் துளியோ
எனை ஆளும் மனுவேலனோ
வளரும் பிறையோ வழிகாட்டும் மறையோ
புது வாழ்வின் விடிவெள்ளியோ
விண்ணின் தேவன் பாலனாய்
வந்தால் ஏழை மடி தாங்குமோ
விண்ணின் தேவன் பாலனாய்
வந்தால் ஏழை மடி தாங்குமோ
பூவின் தளிரோ பன்னீரின் துளியோ
எனை ஆளும் மனுவேலனோ
பஞ்சணை இல்லை தொட்டிலும் இல்லை
மாளிகை அரண்மனை மாடங்கள் இல்லை
முன்னணை தொட்டில் புல்லணை மெத்தை
கந்தைத் துணியில் துயில்கின்ற முல்லை
கன்மணியே என் தவமே
விடிகாலை அழகே விழி மூடிடு
விண்ணின் தேவன் பாலனாய்
வந்தால் ஏழை மடி தாங்குமோ
விண்ணின் தேவன் பாலனாய்
வந்தால் ஏழை மடி தாங்குமோ
பூவின் தளிரோ பன்னீரின் துளியோ
எனை ஆளும் மனுவேலனோ
வளரும் பிறையோ வழிகாட்டும் மறையோ
புது வாழ்வின் விடிவெள்ளியோ
வானகம் உன்னை வாழ்த்திடும் கண்ணே
வையக இருள் நீக்கும் விடிவெள்ளி மீனே
புண்ணியம் ஏதும் செய்தேனோ நானே
நீ எந்தன் மடிமீது மகனாகத்தானே
என்னுயிரே என் தவமே
விடிகாலை அழகே விழி மூடிடு
விண்ணின் தேவன் பாலனாய்
வந்தால் ஏழை மடி தாங்குமோ
விண்ணின் தேவன் பாலனாய்
வந்தால் ஏழை மடி தாங்குமோ
பூவின் தளிரோ பன்னீரின் துளியோ
எனை ஆளும் மனுவேலனோ
வளரும் பிறையோ வழிகாட்டும் மறையோ
புது வாழ்வின் விடிவெள்ளியோ
விண்ணின் தேவன் பாலனாய்
வந்தால் ஏழை மடி தாங்குமோ
விண்ணின் தேவன் பாலனாய்
வந்தால் ஏழை மடி தாங்குமோ
பூவின் தளிரோ பன்னீரின் துளியோ
எனை ஆளும் மனுவேலனோ
வளரும் பிறையோ வழிகாட்டும் மறையோ
புது வாழ்வின் விடிவெள்ளியோ