நான் தள்ளப்படல – NAAN THALLAPADALA
நான் தள்ளப்படல
தள்ளிவிடப்படல
நான் வெட்கப்படல
விரட்டிவிடப்படல
சொந்த பந்தமும் இல்ல
சொத்து சுகமும் இல்ல
ஆனா, கவலை இல்ல
என் வாழ்க்கை வெறுமையா இல்ல
1.தாய் தந்தை எனக்கு இல்ல
ஆனாலும், தவிக்கவில்ல
அண்ணன் தங்கை ஆசை பாசம்
அதுவும் கூட இல்ல
கணவன் மனைவி என்னும்
உறவும் உறுதி இல்ல
பேர்சொல்ல பிள்ளைகளும் எனக்கென
ஒன்னும்மில்ல
ஆனாலும் கலங்கவில்ல
ஆண்டவர் இருக்கையில
ஆனாலும் கலங்கவில்ல
ஆண்டவர் இருக்கையில
இயேசுவின் பிள்ளையுங்க
எந்நாளும் பிழைப்பேங்க
இயேசுவின் பிள்ளையுங்க
எந்நாளும் பிழைப்பேங்க
(நான் தள்ளப்படல)
2.திக்கற்று விடப்படல
தேவன் இருக்கையில
தீங்கொன்றும் நேரவில்ல
திரள் சேனை சூழ்ந்திருக்க
தேவ வார்த்தையால
போஷித்து காக்கப்பட்டேன்
வாதையும் சேதாரமும் என்னை
சேராதுங்க
தேவன் என் ஆதாரம்
அடைக்கலமானாரே
தேவன் என் ஆதாரம்
அடைக்கலமானாரே
துதியையும் மகிமையையும்
அவருக்கே செலுத்திடுவேன்
துதியையும் மகிமையையும்
அவருக்கே செலுத்திடுவேன்
நான் தள்ளப்படல
தள்ளிவிடப்படல
நான் வெட்கப்படல
விரட்டிவிடப்படல
சொந்த பந்தமும் இல்ல
சொத்து சுகமும் இல்ல
ஆனா, கவலை இல்ல
என் வாழ்க்கை வெறுமையா இல்ல