தேவா நீர் என்னை குறித்து- Deva neer ennai kurithu

Deal Score0
Deal Score0

தேவா நீர் என்னை குறித்து
நினைக்கும் எண்ணங்கள் அளவற்றவை
என்னால் எண்ண இயலாது
அது கடற்கரை மணலை விட அதிகமானது
அவை நன்மையானவை
தீமைக்கு ஏதுவானவை அல்ல
அவை நம்பிக்கை அவை நம்பிக்கை தருபவை

ஓ… உம் எண்ணங்கள் நான் அறிந்தால்
என் உள்ளம் புது பெலன் அடையும்-2
என் விசுவாசம் பெருகும்
என் நம்பிக்கை துளிர்க்கும்

அதிகாலைதோறும் அதிகாலைதோறும்
அதை நீர் எனக்கு வெளிப்படுத்தும்-2

தேவா நீர் என்னை குறித்து
நினைக்கும் எண்ணங்கள் ஆழமானவை
என் எண்ணங்களும் உம் எண்ணங்களும்
ஒன்றே இல்லை…..
அதை நான் நோக்க
என் மனக்கண்களை நீர் திறக்கனும்
அவை ஜீவன் அவை ஜீவன் தருபவை

ஓ… உம் எண்ணங்கள் நான் அறிந்தால்
என் உள்ளம் புது பெலன் அடையும்-2
என் விசுவாசம் பெருகும்
என் நம்பிக்கை துளிர்க்கும்

அதிகாலைதோறும் அதிகாலைதோறும்
அதை நீர் எனக்கு வெளிப்படுத்தும்-2

அன்பான எண்ணம் தூய எண்ணம்
அழகான எண்ணம் உமதல்லவோ
உம் வார்த்தைகள் உம் எண்ணங்கள்
அது என் ஜீவன் என் பெலனே-2-ஓ… உம் எண்ணங்கள்

Um Ennangal – Jtriune Official | Tamil Gospel Song | ft. Isaac D and Keba Jeremiah

 
christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo