தேவனைப் போற்றி பாடிடுவோம் – Devanai Pottri Paadiduvom
தேவனைப் போற்றி பாடிடுவோம் – நம்
இயேசுவை என்றும் துதித்திடுவோம்
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்
ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
இரட்சிப்பின் தேவனில் களிகூருவோம்
1)தாழ்வில் நம்மை நினைத்தவரே
வாழ்வில் செய்த நன்மைகளை
அளவில்லா அவரின் கிருபைகளை
என்றென்றும் நாமும் பாடிடுவோம்
2)கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
வேதனை யாவையும் நீக்கிடுவார்
இரட்சிப்பின் தேவன் நம்முடனிருக்க
பயமில்லை என்றும் வாழ்வினிலே
3)சாத்தானின் சேனைகள் எதிர்த்தாலும்
யுத்தத்தில் வல்லவர் ஜெயம் தருவார்
கர்த்தரின் கரத்தில் காத்திருப்போம்
கடைசிவரை நம்மை நடத்திடுவார்
4)மேகமீதில் தோன்றிடுவார்
வேகமாய் நம்மை சேர்த்திடுவார்
விண்ணில் காகளம் தொனித்திடவே
மகிமையில் நாமும் வாழ்ந்திடவே
Devanai Pottri Paadiduvom song lyrics in english
Devanai Pottri Paadiduvom Nam
Yesuvai Entrum thuthithiduvom
Avar Nallavar sarva vallavar
avar namaththai Entrum uyarthiduvom
Aarathipom Aarathipom
Ratchipin Devanil Kalikooruvom
1.Thaazhvil Nammai Nianaithavarai
Vaalvil Seitha Nanmaigalai
Alavilla Avarin Kirubaigalai
Entrentum Naamum Paadiduvom
2.Kannerellam Tudaithiduvaar
Vedhanai Yaavaiyum Neekkiduvaar
Ratchippin devan nammudanirukka
Bayamilla Entrum Vaazhvinilae
3.Saathanin Seanaigal Ethirthalum
Yuththathil Vallavar Jeyam Tharuvaar
Kartharin Karaththil Kaathiruppom
Kadaisivarai Nammai Nadathiduvaar
4.Megameethil Thontriduvaar
Vegamaai Nammai Searthiduvaar
Vinnil Kaalagam Thonithidavae
Magimaiyil naamum Vaazlnthidavae