தாயின் கருவிலே தெரிந்து கொண்டு – Thaayin Karuvilae Therinthu Kondu

தாயின் கருவிலே தெரிந்து கொண்டு – Thaayin Karuvilae Therinthu Kondu

தாயின் கருவிலே தெரிந்து கொண்டு
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
தெரிந்த நாள் முதலாய்
கண்மணி போல் என்னை கருவிலே சுமந்தவரே

உம்மை நினைத்து பாடவைத்தீரே
உம்மை நினைத்து துதிக்கவைத்தீரே
நன்றியோடும்மை பாடிடுவேன்
துதிகளை செலுத்திடுவேன்

வாதை நோய்கள் பெருகின வேளையில்
பெலனை தந்து நடத்தி வந்தீர்
உந்தன் நாமத்தில் சுகம் அடைந்தேன்
சேதமின்றி காத்து வந்தீர்

ஒன்றுக்கும் உதவாத என்னை
தோளில் சுமந்து தாங்கிவந்தீர்
உம்மை போல் வேறு தெய்வமே இல்ல
என்னை என்றும் உயர்த்தி வைத்தீர்

Ummai Ninaithu Paadavaithere – உம்மைநினைத்து பாடவைத்தீரே