சோதனையில் நான் துவளும் போது – Sothanaiyil Nan Thuvalum Pothu

Deal Score0
Deal Score0

சோதனையில் நான் துவளும் போது – Sothanaiyil Nan Thuvalum Pothu

சோதனையில் நான் துவளும் போது
ஏன் என்ற கேள்விகள் பலதானதே!

தனிமை என்னை வதைத்தபோது
தனிமையில் நானும் அழுத போது
கண்கள் கடலானதே கண்ணீர் மழையானதே!
ஏன் என்ற கேள்விகள் பலதானதே!

தூக்கி எறிந்தனரே
தூசி என்றனரே
என்னை தூரமாய் தள்ளினரே!

பலவீனங்கள் என்னை சூழ்ந்த போது
கடும் வார்த்தையால் வார்க்கப்பட்டேன்
கதறி நான் காயப்பட்டேன்

நெஞ்சோரமாய் ஓர் அன்புக்குரல் என்றும் தொனிக்கிறதே!
அது பயப்படாதே என்றதே!
யாவும் செய்து முடிப்பேன் என்றதே!

சொன்னவர் அவரே! செய்திடுவாரே!
நிச்சயமாய் நீ கண்டிடுவாயே!

ஆத்துமாவே! காத்திரு நீ
சொன்னவர் அவரே! செய்திடுவாரே!

இயேசுவே நீர் பாத்திரரே!
சொன்னதை செய்திடும் தெய்வமும் நீரே!

Christian
      Tamil Christians songs book
      Logo