கர்த்தாவாம் யேசுவே – Karthavaam Yesuvae

கர்த்தாவாம் யேசுவே – Karthavaam Yesuvae

1.கர்த்தாவாம் யேசுவே,
அடியார் நெஞ்சிலே
சீர் அருளும்;
விடாத தயவாய்,
பூரண ஒளியாய்
விளங்கி உச்சமாய்
ப்ரகாசியும்.

2.பிதாவின் ஈவெல்லாம்
உம்மாலேயே உண்டாம்,
மா தேவனே;
தயவைக் காண்பிப்பீர்,
பாவத்தை நீக்குவீர்,
சுத்தாங்கம் பண்ணுவீர்,
ரட்சகரே.

3.அநாதி ஜோதியே,
பிதாவின் மைந்தனே
வணக்கமாய்
உம்மண்டை சேருவோம்,
என்றைக்கும் பற்றுவோம்,
அன்பாகச் சேவிப்போம்,
மெய்ப் பக்தியாய்.

Karthavaam Yesuvae song lyrics in English

1.Karthavaam Yesuvae
Adiyaar Nenjilae
Seer Arulum
Vidatha Thayavaai
Poorana Oliyaai
Vilangi Utchamaai
Pirakasiyum

2.Pithavin Eevellaam
Ummalayae Undaam
Maa Devanae
Thayavai Kaanpipeer
Paavaththai Neekkuveer
Suththaangam Pannuveer
Ratchakarae

3.Anathi Jothiyae
Pithavin Mainthanae
Vanakkamaai
Ummandai Searuvom
Entraikkum Pattruvom
Anbaaga Seavippom
Mei Bakthiyaai

பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது.
சங்கீதம் 68 : 8