எப்படிப்பா நான் மறப்பேன் – Eppadipa Naan Marappean

எப்படிப்பா நான் மறப்பேன் – Eppadipa Naan Marappean

எப்படிப்பா நான் மறப்பேன் யாக்கோபு
உன்னை எப்படிப்பா கைவிடுவேன் யோசேப்பு -2

உன்னை கைவிட மாட்டேன் மாட்டேன் விட்டு விலகிட மாட்டேன்-2

1.ஆபிரகாமின் தேவன் நான் ஈசாக்கின் தேவன் நான் யாக்கோபின் தேவன் நான் மாறாதவர் -2
நீ பட்ட வேதனையை மறவேன் அப்பா உன்னோடு நான் துணையாய் வருவேன் அப்பா-2

உன்னை கைவிடமாட்டேன் விட்டு விலகிட மாட்டேன்-2

2.செங்கடலே நின்னாலும் யோர்தானே வந்தாலும் அதிலும் வழி திறக்கும் தேவன் நான் அப்பா-2
உள்ளங்கையில் உன் முகத்தை வரைந்தேன் அப்பா உனக்காய் என் உசுர கொடுத்தேன் அப்பா-2

உன்ன கை விடமாட்டேன் விட்டு விலகிட மாட்டேன்-2

3.கண்ணீரின் வாழ்க்கையா கடன்பட்ட தோல்வியா பூமியில் உயிர் வாழ வழி ஏதும் இல்லையா-2
மனிதனின் வார்த்தை உன்னை மனம் நோக பேசும் என்னுடைய வார்த்தை உன்னை நிறைவாக வாழ்த்தும்

உன்னை கைவிடமாட்டேன் விட்டு விலகிட மாட்டேன்-2

Unnai Kaividamatean | Franklin Moses | Living Light Ministry