எங்கே போவேன் நான்
எந்தன் இயேசுவே !
யாரிடம் சொல்வேன் நான்
எந்தன் பாரத்தை ! (2)
ஆற்றவும் தேற்றவும்
உம்மைப் போல யாருண்டு ? – அன்பு
காட்டவும் அரவணைக்கவும்
உம்மைத் தவிர யாருண்டு ?
நீரே எங்கள் தஞ்சம்…
தயவு காட்டுமே !
கிருபை தாருமே !
உந்தன் அன்பை உணராமல்
நாங்கள் செய்த தவறுகள்
எண்ணிலடங்காதே ! அதை
எழுத முடியாதே ! (2) – ஆனாலும்
மன்னித்தீர் ! மன்னித்தீர் !
தயவாய் என்னை மன்னித்தீர் !
எம் கண்கள் உம்மை தேடுதே !
கரங்கள் கூப்பி அழைக்குதே !
அன்பு தேவனே ! என்
அருகில் வாருமே ! (2) – என்னையும்
தேற்றுவீர் ! தேற்றுவீர் !
அன்பாய் என்னைத் தேற்றுவீர் !
உந்தன் வார்த்தை இன்று தாருமே ! – என்
வழியை நீர் காட்டுமே !
எந்தன் இயேசுவே ! என்
அன்பு நண்பனே ! (2) – நித்தமும்
நடத்துவீர் ! நடத்துவீர் !
கனிவாய் என்னை நடத்துவீர் !- ஆற்றவும்