அவனி யேகினார் நேச – Avani Yoginaar Neasa
பல்லவி
அவனி யேகினார் -நேச
அமல னாகினார் – ஏசு -அவனி
அனுபல்லவி
புவனி யாகவே இ -சுரர் -பவனி யேசுவே,-துதி
பொங்கவே, கதி தங்கவே, பதி துங்கனாங் கிறிஸ்-தேசு
சரணங்கள்
1.காவதில் வினை யாவுமே யறக் கருணை நீடியே,
பூவதின் உயர் கோவனி தையர் புகலும் வாடியே,
ஆவிக் கோலனாய் -மரி -பூவை பாலனாய் -ஒரு
ஆனகம் மிகு மானமும் விடுத் தீனமாய்க் கிறிஸ் -தேசு
2. வானகம் உறு வானவர்க் கொரு மகிமை சேரவும்,
மானிலம் சமாதானம், பிரியம் மகர்மே லாரவும்,
மகிழ்ந்து கூடியே-சுரர்-புகழ்ந்து பாடியே -மிக
வாழ்த்தினார், துதித் தேத்தினார்; பரி சுத்தனாங் கிறிஸ்-தேசு
3.காட்டினில் ஆடு ஓட்டுவோ ரொளி சுகனங் காணவே
கான மோ திடும் வானவர் திரள் காட்சி தோணவே
கானில் நின்றவர், விரைந்-தானில் சென்றவர் பதம்
காதலாயப் பணிந் தோதினார் துதி; நீதனாங் கிறிஸ்-தேசு
4.விண்ணதில் உடு வண்ணமாய்க் கதிர் விளங்கி வீசவே,
விற்பனார், இகந் தற்பரன் வரு விந்தை பேசவே,
வேதங் கூறியே-ஒட்டை-மீதி லேறிய-வெளி
வெட்டை பார்த் தவ ணெட்டி, யேத்தினர். சிட்டராங் கிறிஸ்-தேசு
5. நித்தமும் நம தத்தனைப் பாடி நிஜமாய்ச் செல்லுவோம்
நெறியாய், மறை முறையாய், இந்த நேமி வெல்லுவோம்;
நேச மாகவே-ஒரு-வாசம் ஈகவே-மறை
நீட்டவுங் குறை யோட்டவும் அருளூட்டவுங் கிறிஸ்-தேசு