அருளின் மணம் வீசும் – Arulin Manam Veesum

அருளின் மணம் வீசும் – Arulin Manam Veesum

கண்ணே தாலேலோ
கண்ணே தாலேலோ

அருளின் மணம் வீசும்
நறுமலரே உன்னைக் கண்டேன்
அருளின் மணம் வீசும்
நறுமலரே உன்னைக் கண்டேன்

குளிரில் ஏழைக் குடிலில்
எம் துன்பம் நீக்க வந்தாயோ

அருளின் மணம் வீசும்
நறுமலரே உன்னைக் கண்டேன்

கண்ணே தாலேலோ
கண்ணே தாலேலோ

ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராராரிரோ

பொன்னும் மணியும் உன் மேனியில்
மின்ன மனமில்லாமல்
கந்தை துணியை நாடி
நீ இந்நிலம் வந்தாயோ

குளிரில் ஏழைக் குடிலில்
எம் துன்பம் நீக்க வந்தாயோ

அருளின் மணம் வீசும்
நறுமலரே உன்னைக் கண்டேன்

வான தூதர் சூழ்ந்து இசை
பாட வேண்டிடாமல்
மேய்ப்பர் குரலின் ஓசை
நீ கேட்கவே வந்தாயோ

குளிரில் ஏழைக் குடிலில்
எம் துன்பம் நீக்க வந்தாயோ

அருளின் மணம் வீசும்
நறுமலரே உன்னைக் கண்டேன்
அருளின் மணம் வீசும்
நறுமலரே உன்னைக் கண்டேன்

குளிரில் ஏழைக் குடிலில்
எம் துன்பம் நீக்க வந்தாயோ

அருளின் மணம் வீசும்
நறுமலரே உன்னைக் கண்டேன்

கண்ணே தாலேலோ
கண்ணே தாலேலோ

ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராராரிரோ

ஆரிராராரிரோ
ஆரிராராரிரோ