அதிகாலை பனிவாடைக் காற்றே – Athikalai Panivadai Katre
அதிகாலை பனிவாடைக் காற்றே
கொஞ்சம் மெதுவாக பணிவாக வீசு
எங்கள் மனுதேவன் மரி மைந்தன் பிறந்தாரம்மா
அந்த மனுவேலன் மகராஜன் மலர்ந்தாரம்மா
பதம் தேடியே மெல்லத் தீண்ட
தென்றல் காற்றே வா
அதிகாலை பனிவாடைக் காற்றே
கொஞ்சம் மெதுவாக பணிவாக வீசு
ஆயர் குலம் இன்று மகிழ்கின்றது
ஆனந்த மழை நீரில் நனைகின்றது
ஆருயிர் எழில் கண்டு நெகிழ்கின்றது
ஆதவன் முகம் கண்டு மலர்கின்றது
மணிமாளிகை இடம் தரவில்லையோ
தொழுவத்திலே எங்கள் தவ முல்லையோ
பதம் தேடியே மெல்லத் தீண்ட
தென்றல் காற்றே வா
அதிகாலை பனிவாடைக் காற்றே
கொஞ்சம் மெதுவாக பணிவாக வீசு
பூமுகம் புது வாசம் கமழ்கின்றது
பார்க்கின்ற விழி வாசல் தொழுகின்றது
தாமரை தரைமீது தவழ்கின்றது
ஆதியின் அருஞ்ஜோதி எழுகின்றது
விடிகாலையோ அவன் விழியோரமே
விதி யாவுமே அவன் விளையாடலே
பதம் தேடியே மெல்லத் தீண்ட
தென்றல் காற்றே வா
அதிகாலை பனிவாடைக் காற்றே
கொஞ்சம் மெதுவாக பணிவாக வீசு
எங்கள் மனுதேவன் மரி மைந்தன் பிறந்தாரம்மா
அந்த மனுவேலன் மகராஜன் மலர்ந்தாரம்மா
பதம் தேடியே மெல்லத் தீண்ட
தென்றல் காற்றே வா
அதிகாலை பனிவாடைக் காற்றே
கொஞ்சம் மெதுவாக பணிவாக வீசு