கன்னி மரியின் மடிதனில் – Kanni Mariyin Madithanil
கன்னி மரியின் மடிதனில் மகிழ்ந்தாடும் மன்னவன்
தூதர்கள் துதித்திடும் தேவாதி தேவன்
தொழுவத்தில் வந்துதித்தார்
1) பயப்படாதே என்றுரைத்த பார்போற்றும் பரிசுத்தரே
கலங்கிடாதே என்றுரைத்த கர்த்தாதி கர்த்தரே
திகையாதே என்றுரைத்த திரியேக தேவனே
சத்துருவை சங்கரிக்கும் லோக மீட்பரே
2) அடிமை வாழ்வை அழிக்கவந்த அற்புத பாலகனே
அருளின் ஒளியாய் இருளை நீக்கும் நேச தீபமே
தரணியை மீட்க வந்த சீரேசு நாதனே
தொல்லை கஷ்டம் நீக்க வந்த தேவ மைந்தனே
3)மாசில்லாத மைந்தனுக்கோ மாணிக்க தொட்டிலில்லை
மாடடையும் கொட்டினிலே மாமன்னன் உதித்தாரே
பாவியை இரட்சிக்கவே பரலோகம் விட்டிறங்கி
பாவம் சாபம் நீக்கிடவே பாரில் உதித்தார்
Kanni Mariyin Madithanil song lyrics in English
Kanni Mariyin Madithanil Magilnthaadum Mannavan
Thoothargal Thuthidum Devaathi Devan
THozhuvaththil Vanthuthithaar
1.Bayapadathae Entruraitha Paarpottrum Parisuththarae
Kalangidathae Entrutaitha Karthathi Kartharae
Thigaiyathae Entruraitha Thiriyeaga Devane
Saththuruvai Sangarikkum Loga Meetparae
2.Adimai Vaalvai Alikka Vantha Arputha Paalaganae
Arulin Oliyaai Irulai neekkum Neasa Deepamae
Tharaniyai Meetka Vantha Seeraesu Naathanae
Thollai Kastam Neekka Vantha deava Mainthanae
3.Maasilla Mainthanukko Maanikka Thottillilai
Maadadaiyum Kottinilinae Maamannan Uthitharae
Paaviyai Ratchikkavae Paralogam Viitirangi
Paavam Saabam Neekkidave Paaril Uthithaar.