என் பின்னே வா என்று அழைத்த – En Pinnae Vaa Entru Alaitha
என் பின்னே வா என்று அழைத்த தேவன்
உன்னை கைவிடுவாரோ? அவர் விலகிப்போவாரோ
என் பின்னை வா என்று அழைத்த தேவன்
சத்திய பரன் அல்லோ? அவர் நித்திய பரன் அல்லோ
1. கால்கள் சருக்கும் போது
கிருபையால் தாங்கினீரே
நடைகள் ஸ்திரப்படுத்தி – தேவா
தொடர வைத்தீரே – உம்மை
தொடர வைத்தீரே – என் பின்னே
2. நாதா உம் அடிச்சுவட்டில்
பின்பற்றி வரும்போது
மலைக் கண்டு மலைத்தபோது -தேவா
பாதையாய் மாற்றினீரே – உந்தன்
பாதையாய் மாற்றினீரே
3. சிலுவை பாரம் அழுத்த
தள்ளாடி தவித்தப்போது
உம் தோள்களில் சுமந்து வந்தீர் – தேவா
மகிமையின் பிரசன்னத்தால் – உந்தன்
4. அப்பா உம் அழைப்பினை நான்
கவனமாய் நிறைவேற்றவே
உத்தம ஊழியன் நீ – என்று
எனைப் பார்த்து சொல்லனுமே – நான்
உமைப் பார்த்து மகிழனுமே – என் பின்னே