என் தலை தண்ணீரும் – En Thalai Thaneerum
என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
ஆனால் அது எனக்கு நலமாமிருக்கும்
ஆனால் அதுவே எனது ஜெபமாயிருக்கும்
நான் இரவும் பகலும் கதறி ஜெபித்திட
நான் கதறி கதறி கண்ணீர் வடித்திட
கோடான கோடி ஜனம் நிறைந்த தேசம் இது
பத்தில் ஒரு பங்கு கூட உம்மை அறியல
இந்த பக்தி உள்ள தேசத்திற்கு இயேசுவை தெரியல
சாபத்தால் அடிமைப்பட்டு போன தேசம் இது
சாபத்தின் கட்டுக்கள் அறுக்க யாரும் இங்கில்ல – இந்த
சாபத்தின் கட்டுக்கள் அறுக்க சபையை எழுப்புமே
பாவத்தின் அகோரத்தில் அழிந்திடும் தேசம் இது
பரிந்து பேசிட ஆட்கள் தாருமே
பரிசுத்தமாகவே என் தேசம் மாறுமே