இயேசு மீட்பர் உந்தன் நெஞ்சில் – Yesu Meetpar Unthan Nenjil

இயேசு மீட்பர் உந்தன் நெஞ்சில் – Yesu Meetpar Unthan Nenjil

1.இயேசு மீட்பர் உந்தன் நெஞ்சில்
வாசம் பண்ண விடாயோ?
உந்தன் பாவம் சுமந்தோரை
இன்று ஏற்றுக் கொள்ளாயோ?

இயேசு மகாராஜர் இதோ
வாசலண்டை நிற்கிறார்
பாவி! நீ இவ்வன்பை எண்ணி
வாசலைத் திறக்கப் பார்

2.பாவம் லோகம் ஆபாசம்
யாவும் இடம் பெற்றதோ
நீசச் சிலுவையில் மாண்ட
நேசர்க் கிடமில்லையோ?

3.இன்னுமே நீ தாமத்தித்தால்
பின்பு மோசம் வருமே
இப்போதே இரட்சண்ய காலம்
அப்பால் பிந்திப் போகுமே

4.கூவி நிற்கும் மீட்பர் சத்தம்
பாவி கேட்டுத் திறப்பாய்
உந்தன் ஜீவன் பெலன் யாவும்
இன்றே தத்தம் செய்குவாய்

5.நாளை என்று சொல்லி நின்றால்
நஷ்டம் என்றும் அடைவாய்,
வேளை இதை வீணாய் விட்டால்
வெகு கஷ்டப் படுவாய்.

6.யோவான் மூன்று பதினாறை
வேகமாய் விஸ் வாசியே
தாக முள்ளோரை அழைக்கிறார்
பாகப் பணமின்றியே.

7.அல்லேலூயா கீதம் பாட
வல்ல நாதரண்டை வா;
தள்ளியே தாமதம் செய்யார்,
நல்ல யேசு நாதரே.

Yesu Meetpar Unthan Nenjil song lyrics in English

1.Yesu Meetpar Unthan Nenjil
Vaasam Panna Vidaayo
Unthan Paavam Sumanthorai
Intru Yeattru Kollayo

Yesu Maha Raajar Itho
Vaasalandai Nirkiraar
Paavi Nee Evvanbai Enni
Vaasalai Thirakka Paar

2.Paavam Logam Aabaasam
Yaavum Idam Pettratho
Neesa Siluvaiyil Maanda
Neasarku Idamillaiyo

3.Innumae Nee Thaamathithaal
Pinbu Mosam Varumae
Ippothae Ratchanya Kaalam
Appaal Pinti Pogumae

4.Koovi Nirkum Meetpar Saththam
Paavi Keattu Thirappaai
Unthan Jeevan Belan Yaavum
Intrae Thaththam Seiguvaai

5.Naalai Entru Solli Nintraal
Nastam Entrum Adaivaai
Vealai Ithai Veenaai Vittal
Vegu Kastapaduvaai

6.Yovaan Moontru Pathinarai
Veagmaai Visvasiyae
Thaagam ullorai Alaikiraar
Paaga Panamintriyae

7.Alleluya Geetham Paada
Valla Naatharandai Vaa
Thalliyae Thaamatham Seiyaar
Naalla Yesu Naatharae