நான் போகும் பயணம் – Naan Pogum Payanam

நான் போகும் பயணம் – Naan Pogum Payanam

C minor

1.நான் போகும் பயணம்
ரொம்ப ரொம்ப தூரம்
நான் நடந்த பாதையெல்லாம்
என் தெய்வம் கூட வந்தார்-2

எத்தனையோ மலைகள்
கடும்பள்ளத்தாக்குகள்
துர்ச்சனப்பிரவாகம் மரண இருளும்
என்னை நெருக்கி மூடிக்கொண்ட நேரம்
ஒரு தகப்பனைப்போல்
தூக்கி அணைத்துக்கொண்டீர்
மாறாத கிருபை விலகாத கிருபை-2
என் மேலே வைத்தீரையா-2

அன்பே என் இயேசுவே
ஆராதனை உமக்கே-2

2.வனாந்திர பாதையில
நான் நடந்து போகையில
தாகத்தால் நாவறண்டு
தண்ணீரும் இல்ல இல்ல-2

அங்கும் இங்கும்
அலைந்து நான் திரிந்தேன்
அந்த அழுகை என்ற
பள்ளத்தாக்கில் நடந்தேன்-2
மழை பெய்து குளங்கள்
நிரம்புவது போல-2
என் ஆத்துமாவை நிரப்பினீர்
என் தாகம் தீர்த்தீரையா

அன்பே என் இயேசுவே
ஆராதனை உமக்கே-4

3.பொல்லாத உலகில
துணை செய்ய யாரும் இல்ல
என்னையும் காக்கிறவர்
தூங்கவில்ல உறங்கவில்ல-2

ஆறுகளை கடந்து நான் போனேன்
அந்த அக்கினியில்
உருவ நான் நடந்தேன்-2
முழுகி போகல
எரிந்தும் நான் போகல-2
கூடவே வந்தீரையா-2

அன்பே என் இயேசுவே
ஆராதனை உமக்கே-4