நன்மை செய்யும் நாயகரே – Nanmai Seiyum Nayagarae

நன்மை செய்யும் நாயகரே – Nanmai Seiyum Nayagarae

பல்லவி

நன்மை செய்யும் நாயகரே
பார் போற்றும் தூயவரே-2
எனக்காக நிற்பவரே
எப்போதும் இருப்பவரே-2

அனுபல்லவி

நன்றி என்ற ஓர் வார்த்தை
உமக்கது போதுமோ? -2
உம் பாதம் பணிந்தாலும்
நன்றி கடன் தீருமோ? -2

சரணம் -1

விட்டு விடாமலே விட்டுக் கொடாமலே
விழுங்க விழி தேடும் கண்களில் படாமலே-2
கரங்களில் வரைந்தீரே
காரியமாய் அழைத்தீரே-2
அழைப்பினை மறப்பேனோ?
அறுவடை கொடாமல் மரிப்பேனோ?-2

சரணம் -2

என் பாவம் நிலுவையிலே என்னைத் தள்ளிடாமலே
சுமந்தீர் சிலுவையிலே நிறைந்தீர் மனதினிலே -2
மனிதரன்பு மறந்திடுமே
புனிதரன்போ? தொடர்ந்திடுமே -2
நீர் செய்த தியாகங்கள்
எழுதுவேன் பல நூறு ஆகமங்கள் -2